ஓசூர், ஆக. 18- 10-08-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணியளவில், ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன் இல்லத்தில் கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் உற்சாகமாக நடை பெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் டார்வின் பேரறிவு, தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.பா.மதிவாணன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக.பொன்முடி, நோக்க உரையாற்றினார். மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை.ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட துணை செயலாளர் எழிலன், பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, கடவுள் மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார்.
நிகழ்வில் மாநகர தலைவர் ரமேஷ், மாணவர் கழக தருண் சித்தார்த்தன், ஒன்றிய அமைப்பாளர் பூபதி, ப.சந்தான, ஈரோடு பாண்டியன், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் தருண், நன்றி கூறினார்.
பெரியார் உலகத்திற்கு ஓசூர் மாவட்ட சார்பாக பெருமளவில் நிதி வழங்குவது முடிவுசெய்யப்படுகிறது.
செப்டம்பர்-17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
விடுதலை நாளிதழ் பழைய சந்தாவை புதுப்பித்தல் மற்றும் புதிய விடுதலை சந்தாக்களை சேர்த்து அதிக அளவில் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் கழக இளைஞரணி சார்பில் இல்லங்கள் தோறும் கழக கொடியேற்றி கோலாகல மாக கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.
திராவிட மாடல் நாயகர் முதலமைச் சர் அவர்களும்,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் பங்கேற்கும் அக்டோபர்-04 செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு ஓசூர் மாவட்டத்திலிருந்து 100 தோழர்களோடு பங்கேற்பது. மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து. மற்றும் விளம்பர பதாகை வைப்பது என முடிவு செய்யப்படுகிறது.
ஓசூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் தொடர்ச்சியாக துண்டறிக்கையை பரப்பும் பணியில் ஈடுபடுவது, கிளைக் கழகங்கள் உருவாக் குவது, கழக இளைஞரணி கட்டமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்கள்
மாவட்ட இளைஞரணி தலைவர் பி.டார்வின் பேரறிவு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செ.பா. மணிவண்ணன்.