காரைக்கால், ஆக. 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிறைவு மாநில மாநாட்டை விளக்கி காரைக்கால் மாவட்டம் போலகம் கடைவீதியில் 17-08-2025 மாலை 6 மணியளவில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம், நிகழ்விற்கு தலைமை வகித்தார். சிவ புகழ், தாமரைச் செல்வம், நீலம் மணி கண்டன், ராகுல், ஆகிய வர்கள் நிகழ்விற்கு முன் னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக பொன்முடி, தொடக்க உரையாற்றினார்.
கழக பேச்சாளர் மாங்காடு சுப. மணியரசன், சிறப்புரையாற்றினார்.
காரைக்கால் மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் ஜவகர், காங்கி ரஸ் மாவட்டத் தலைவர் பி.டி. முரளி, மற்றும் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் பிரவீன் பிர்லா, ஆகியோர் உரையாற்றினார்கள்.நிகழ்வில் பொறுப்பாளர் களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி, மாண வர்கள், வியாபாரிகளும் ஆங்காங்கு நின்று பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர்.