டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 2026 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே வெளிப்படையான, வாக்காளர் திருத்தம் நடைபெற வேண்டும் என மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* ‘நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி ஆர்.எஸ்.எஸ்.-சைப் புகழ்ந்து பேசியது சுதந்திரப் போராட்டத்தின் உண்மையான லட்சியங்களான தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பை அவமதிப்பதாகும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்
* ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை அடுத்து, இது குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஒரு நபரைப் பாதுகாக்கப் போராடுங்கள், ஒரு வாக்கு’: ராகுல் காந்தி பீகாரின் சசாரத்திலிருந்து ‘வாக்காளர் அதிகார பயணத்தை’ தொடங்குகிறார். ராகுல், ஆர்ஜேடியின் தேஜஸ்வி மற்றும் பிற எதிர்க் கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடையும் 1,300 கிமீ நீள பயணத்தை மேற்கொள்வார்.
தி இந்து:
* ‘பீகாரில் எந்த வெளிநாட்டவரும் SIR பட்டியலில் இல்லை, மோடி பிரிவினைக்கான நிகழ்ச்சி நிரலை கொண்டு வருகிறார்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கண்டனம்.
தி டெலிகிராப்:
* ‘கப்பர் சிங்’ வரி (ஜி.எஸ்.டி.)யில் மாற்றம். காங்கிரஸ் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவு.
– குடந்தை கருணா