தூத்துக்குடி, ஆக. 17- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 45ஆவது நிகழ்ச்சி புத்தக அறிமுகவுரை 9.8.2025 அன்று மாலை 6.30 மணிக்கு மாவட்ட கழகத் தலைவர் இரா.ஆழ்வார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வழக்குரைஞரணிச் செயலாளர் இ.ஞா.திரவியம் அனைவரையும் வரவேற்றார். முன்னிலை வகித்தோர் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் ‘உண்மை’ இதழின் சிறப்பினை எடுத்துக் கூறினார்.
தொடக்கவுரையாகத் தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி மோ.அன்பழகன் ஜாதியால் தமிழர் சமுதாயம் படும் இன்னல்களை, சீரழிவுகளை எடுத்துக் கூறினார்.
அடுத்து, பகுத்தறிவாளர் கழகத் தோழர் சீ.மனோகரன் கோவில்கள் தோன்றியதன் நோக்கத்தைப் பற்றி முன்னுரை வழங்கினார். இறுதியாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி 1972இல் முதல் பதிப்பாக வெளியான ‘கோவில்கள் தோன்றியது ஏன்?’ என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி, உள்ளடக்கத்தை விவரித்தார்.
புத்தகம் எழுத வேண்டிய காலகட்டம் பற்றியும், வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கோவில்கள் கட்டப் பட்டன என்பதையும், சாணக்கியன் தம் இனம் பிழைக்க, திராவிட மக்களின் அறிவை மழுக்கி, பொருளினைச் சுரண்ட மன்னரின் துணையோடு செய்யப்பட்டதே கோயில்கள் என்ற செய்தியையும, வரலாற்றாய்வாளர் பி.சிதம்பரம் பிள்ளை, சட்ட நிபுணர் ஜெ.சி.கோஷ் ஆகியோரின் சான்றுகளைக் கோடிட்டுக் காட்டி, எல்லோரும் செல்வதாக இருந்ததே கோவில்கள் என்பதனையும், பார்ப்பனர் மட்டும் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை, மீறி நுழைந்தோர் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டனர் என்பதையும் ஆகமங்கள், அனை வரையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிப்பதோடு, பூஜை செய்யும் அனுமதிக்கிறது என்பதையும், கோவில்களின் வருமானம் அர சருக்கே சென்றன என்பதையும்,
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் கிறித்தவ பாதிரிகளின் முறை யீட்டால் மசூதி, சர்ச்சு, கோவில் வருமானம் கோவில்களின் சொத் தாக்கப்பட்டன என்பதையும், 1921இல் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பக்த சிகாமணிகளின் முறையீட்டால் சி.பி. இராமசாமி அய்யரின் ஆய்வறிக்கையால் கோவில் சொத் தைக் களவாடிக் கும்மாளம் போட்ட இழிநிலைக்கு ஒரு முடிவு ஏற்படுத்தப்பட்டது என்பதையும்,
ஆகக் கோவில்கள் கும்பிடு வதற்காகக் கட்டப்பட்டவையல்ல, அரசன் வருமானத்திற்காகவென்றும், யாரையும் தடுக்காது எல்லோரும் நுழையுமிடமாகவே கோவில்கள் இருந்தனவென்றும், என்றைக்குப் பார்ப்பனர் நுழைந்தனரோ அன்றிலிருந்து நம் மக்கள் தடுக்கப்பட்டனர் என்றும், அய்யா வின் 95 ஆண்டுகால உழைப்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் எடுப்பில், தளபதியார் மு.க.ஸ்டாலின் தீவிர சட்ட நடவடிக்கைகயில் இன்று நம் இழிவு முற்றிலும் நீங்கியிருக்கிறதென்பதனை ஆசிரியர் கோடிட்டுக் காட்டியுள்ள வரலாற்றுச் செய்திகள் வழி எடுத்துக்கூறி அறிமுகவுரையை நிறைவு செய்தார். சி.முருகராசா நன்றி கூறி நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, செயலாளர் கோ.முருகன், துணைச் செயலாளர் செ.செல்லத்துரை, ப.க. மாவட்டத் தலைவர்ச.வெங்கட்ராமன், சு.திருமலைக்குமரேசன், கி.கோபால்சாமி, திருச்செந்தூர் தோழர்கள் து.கவுசிக், பு.பிரவின், த.மவுரியன், சேகுவேரா, வே.சுதர்சன், இலி.அபிலிங்கேஸ்வரன், மு.முத்துசஞ்சய், ந.பிரபாகரன், பி.பிரித்விராஜ், கோ.இளமுருகு, விக்கேஷ்ளு, அ.பார்த்தசாரதி, பொ.போஸ், அ.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.