சென்னை, ஆக.17– திருத்தணி முருகன் கோவிலில் நேற்று (16.8.2025) ஆடிக் கிருத்திகை விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சென்னை கலைஞர் கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (வயது 38) என்பவரது 3 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இதேபோல் பூவிருந்த வல்லி வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா (55) என்பவரிடம் 3 பவுன் நகை திருடப் பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (50) வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் 3 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகை திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.