ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் 18 பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்!

3 Min Read

சென்னை, ஆக. 17- தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நா;sகளில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம், பெருங்களத்தூர், மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றிலிருந்து ரூ.1.26 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், பயணிகளிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குரிமையையும் பறிக்கும் பா.ஜ.க. அரசு

செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை, ஆக.17- சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் சட்ட பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அய்யம் பெருமாள் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:-

ஒன்றிய பா.ஜனதா அரசு பண மதிப்பிழப்பை ஏற்படுத்தியதோடு ஜி.எஸ்.டி. மூலம் நம் பணத்தையும் பறித்தது. மக்களின் வாழ்வுரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என அனைத்து உரிமைகளையும் மோடி அரசு பறித்துவிட்டது. தற்போது நமக்கு உள்ள ஒரே உரிமையான வாக்குரிமையையும் தேர்தல் ஆணையம் உதவியுடன் பறிக்க முயற்சிக்கிறது. இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை. ஆனால் இல்லாதவர்கள் பெயரில் வாக்கு இருக்கிறது. நம் வாக்குரிமையை மட்டும் இழக்காமல் வரும் தேர்தலில் பா.ஜனதா மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேனாள் ஒன்றிய அமைச்சர் தங்கபாலு, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சுதா பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை-இலங்கை கப்பலில்

கடந்த ஓராண்டில்
20 ஆயிரம் பேர் பயணம்

தமிழ்நாடு

நாகை, ஆக.17- நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குக் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ‘செரியாபாணி’ என்ற பெயரில் இயக்கப்பட்ட இந்த கப்பலில் போதிய பயணிகள் வராத காரணத்தால் இந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி ‘சுபம்’ நிறுவனத்தின் சார்பில் மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவை தொடங்கி நேற்றுடன் (16.8.2025) ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், மும்மதத்தை சேர்ந்தவர்கள் கொடியசைத்து 2ஆம் ஆண்டு சேவையை தொடங்கி வைத்தனர்.

பின்னர் கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர். இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்வதற்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் 3 பகல், 2 இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் பயணச்சீட்டு கட்டணத்தோடு ரூ.9 ஆயிரத்து 999 என சிறப்பு சலுகை திட்டம் உள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *