சென்னை, ஆக.16 தமிழ்நாடு அரசால் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பாராட்டு விழாவும், விருது வழங்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, ‘சமுதாய சேவகன் ஒளி வீசும் காவலன்’ ஆவணப் படம் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா சென்னை எழும்பூர் பைஸ் மகாலில் நேற்று (15.8.2025) மாலை நடைபெற்றது.
கட்சியின் மாநில செயலாளர் ஏ.எம் முகம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். கே.பி.ஏ. காஜா முயினுத்தீன் பாகவி தலைமையேற்றார். தமிழ்நாடு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ. வேலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷானவாஸ் எம்.எல்.ஏ. முதலியோர் வாழ்த்துரை வழங்கினர்.
‘தகைசால் தமிழர்’ விருது ெபற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஏற்புரை வழங்கினார்.