எமது அருமை தூய்மைப் பணியாளர் சகோதர, சகோதரிகளுக்கு உரிமையுடன் அன்பு வேண்டுகோள்!

நமது முதலமைச்சர் ஓர் ஒப்பற்ற மனிதநேயர்!

ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களிடம் உரி மையும், உறவும், மாறா அன்பும் கொண்டவர்.

மக்கள்மீது நடந்த ‘துப்பாக்கிச் சூட்டை’ தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் முதலமைச்சர் அல்லர் அவர்!

தூய்மைப் பணியாளர் நலத்திலும், நல் வாழ்விலும் மிக்க ஈடுபாடு கொண்ட முதலமைச்சர்!

அமைச்சரவை முடிவுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு 6 முக்கியமான கல்வி, காப்பீடு, சுயதொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வகைத் திட்டங்களை அறிவித்துள்ளார்; அடக்குமுறைமூலம் ஆள நினைப்பவர் அல்ல; அன்பின் பிணைப்பே இயைந்த மக்கள் முதலமைச்சராக ஆட்சி செலுத்துகிறார் என்ற நிலையில், அவர் உளப்பூர்வமாக, கொள்கைப்பூர்வமாக ஒடுக்கப்பட்டோர், உதவப்படவேண்டிய அடித்தட்டு (தூய்மைப் பணியாளர் போன்றவர்களின்) மக்களின் நல வாழ்வில் அக்கறை கொண்டவர் என்பதால், அவரது உறுதிமொழிகளை ஏற்று, உங்களது போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்பிடுங்கள்.

உங்கள் கோரிக்கைகளை ‘‘அரசியலாக்கி’’, தங்களது ‘‘அரசியலுக்குப்’’ பகடைக் காய்களாக உருட்டி, தாங்கள் லாபம் அடைய உங்களைப் பயன்படுத்த முனைவதைப் புரிந்து, எதிரிகள் தவறாக வழிநடத்த இடம் தராதீர்கள்! உண்மையான பாதுகாவலர்களை அடையாளம் காணுங்கள்!

உங்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் என்றும் உங்கள் நலன் மீது அக்கறை உள்ள இயக்கத்தின் சார்பில் அவசர வேண்டுகோள் விடுக்கிறோம்!

நமது முதலமைச்சரை நம்பினோர் கெடுவதில்லை!

கி.வீரமணி

 தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை 

15.8.2025   

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *