அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் பொதுவெளியில் சில மாதங்களாக மோதல்கள் இல்லாமல் இருந்தது. இது, ஒன்றிணைப்புக்கான சமிஞ்ஞை என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது என இபிஎஸ் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி சசிகலா வெளியிட்ட சுதந்திர நாள் வாழ்த்து, தலைமை பண்பு இல்லாத இபிஎஸ் என ஒபிஎஸ் விமர்சனம் என்று மீண்டும் அதிமுகவின் தலைமை பதவிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.
கோயிலா கொலைப் பீடமா?
கருநாடகா தர்மஸ்தலா கோயில் காரணமறியாத மரணங்கள் விவகாரத்தில், தான் மட்டுமே 80 பேரின் உடல்களை புதைத்ததாக கோயில் மேனாள் ஊழியர் பகீர் கிளப்பியுள்ளார். காடு, நதிப்படுகைகளில் உடல்களை புதைத்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் உடல்களை புதைத்த போதும், அதை பார்த்த ஒருவர் கூட எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்றும் கூறியுள்ளார்.