பெரம்பலூர், ஆக. 15- செங்கல்பட்டு மறைமலை நகரில் 4.10.2025இல் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்க பரப்புரை தெருமுனை கூட்டம் 11 .8. 2025 திங்கள் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே மாவட்ட தலைவர் சி தங்கராசு தலைமையில் நடைபெற்றது கழக சொற்பொழிவாளர் தி .என்னாரெசு பிராட்லா சிறப்புரை ஆற்றினார்கள்.
மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன்தொடக்கவுரைநிகழ்த்தினார். கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களும் ,திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினரும் ஓவியச் செம்மல் கி. முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்கள்.
சிறப்பு பேச்சாளர் என்னாரெசு பிராட்லா சிறப்பு வாய்ந்த நல்லதொரு கருத்துக்களை ஆற்றினார். ஆலத்தூர் ஒன்றிய திராவிடர்கழக செயலாளர் அரங்க வேலாயுதம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.