சிதம்பரம், ஆக.14- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம் 6.08.2025 அன்று மாலை 6.00 மணிக்கு அண்ணாமலை நகரில் பெரியார் பெருந்தொண்டர் சங்கர் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் திராவிட மாணவர் கழக வரலாறு அதன் தொடர்ச்சியாக நடைபெறுகிற போராட்டங்கள் தந்தை பெரியார் அவர்களால் கிடைத்த மாணவர்களுக்கு கல்வி உரிமை தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பையும் கல்வி சார்ந்த போராட்டங் களையும் தொடர்ச்சியாக கல்விக்கூடங்களை காவிமயமாக்க துடிக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களையும் மாணவர்கள் மத்தியில் விளக்கி உரையாற்றினார்.
தொடர்ந்து சிதம்பரம் மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.நெடுமாறன், சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.செங் குட்டுவன், பெரியார் பெருந்தொண்டர் சங்கர் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.
மிகச் சிறப்பாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் களை ஒருங்கிணைத்து நடத்திய சிதம்பரம் மாவட்ட துணைத் தலை வர் அன்பு. சித்தார்த்தன் அவர்களை கூட்டத்தில் பாராட்டி மகிழ்ந்தனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள்:
தலைவர்: இரா.அறிஞன்
செயலாளர்: செ.அபிஷேக்