காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது, ‘இண்டியா’ கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும். லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்ற பின், அனைத்து கட்சிகளும் கூடி ஆலோசித்து பிரதமரை முடிவு செய்வோம்.
டவுட் தனபாலு: அட, பிரதமர் வேட்பாளரை விடுங்க… லோக்சபா தேர்தலுக்கு தொகுதி பங்கீடு பேச்சு ஆரம்பிச்சதுமே, உங்க கூட்டணி வண்டியில் இருந்து ஒவ்வொரு சக்கரமா சுழன்று ஓடிடும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
தினமலர், 6.11.2023, பக்கம் 8
அது சரி, கடந்த 5 ஆண்டுகாலமாக நாடாளுமன்ற மக்களவையில் துணைத் தலைவரையே நியமிக்க வில்லையே, என்ன காரணம்?