தெலங்கானாவிலும் ஆளுநருக்குக் குட்டு! தெலங்கானாவில் ஆளுநரின் எம்.எல்.சி நியமனம் ரத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

அய்தராபாத், ஆக.14 தெலங்கானா மாநில ஆளுநரால் எம்.எல்.சி-யாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம். கோதண்டராம் மற்றும் அமீர் அலி கான் ஆகியோரின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்களை ஆளுநர் பரிந்துரைக்கும் நடைமுறை குறித்தும் நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

கல்வியில் அக்கறை!

‘திறன்’ இயக்கம்
 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றல் தேர்வு

சென்னை, ஆக.14 அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்படும். இந்த திறன் இயக்கம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ‘திறன்’ இயக்க மாணவா்கள் தனியாக அமரவைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த வேண்டும். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்களைச் சோ்த்து பயிற்சி தர வேண்டும். வகுப்புகளுக்கு தலா 90 நிமிடங்கள் வீதம் 30 நாள்கள் பயிற்றுவிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு தோ்வுகளை நடத்த வேண்டும். ஒரு பாடத் தலைப்பு முடிவடைந்த பின்னா் அதற்கான பயிற்சித் தாள் தயாா் செய்வதை தலைமை ஆசிரியா் உறுதி செய்ய வேண்டும். இதற்கான ஆசிரியா் கையேடு மற்றும் மாணவா் பயிற்சி புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம்

இந்தியா

லக்னோ, ஆக.14- உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப் பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *