கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட்டு தீர்வு காணுதல், தெளிவு பெறுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதித் துறையையும் அது விட்டு வைக்கவில்லை. இந்தநிலையில், மாவட்ட நீதிமன்றங்களில் ஏ.அய். எனப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, கேரள அரசாங்கம். இதன்மூலம், நாட்டிலேயே முதன்முறையாக இப்படிப்பட்ட தடையைக் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெயரையும் கேரளா தட்டிச் சென்றுள்ளது.