வாசிங்டன், ஆக.13- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 90 நாள்களுக்கு ஒத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அவர் தனது Truth சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.
வரி ஒத்திவைப்பு
முன்னதாக, அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி இறக்குமதிப் பொருள் களுக்கு வரி விதித்து வந்தன. இதன் விளைவாக, கடந்த மே மாதம் இந்த வரிகளைக் குறைப்பதற்காக இரு நாடுகளும் தற்காலி கமாக ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைய சில மணிநேரங்களே இருந்த நிலையில், தற்போது இந்த புதிய ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வரி ஒத்திவைப்பு, நவம்பர் 10-ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சு வார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சீனாவிற்கு வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் கூறிய உடன் அமெரிக்க பொருட்களுக்கு நாங்கள் வரிவிதிப்போம் என்று சீனா பதிலடி கொடுத்தது. இதனால் அதிபர் டிரம்ப் சீனாவின் மீதான வரி விதிப்பை நிறுத்தி வைக்க முடியாமல் காலம் தாழ்த்துகிறார். அதே நேரத்தில் இந்தியா விற்கு முதலில் 25 விழுக்காடு அதன் பிறகு 4 நாட்கள் இடைவெளியில் மற்றொரு 25 விழுக்காடு என 50 விழுக்காடு வரியை உயர்த்திய போது மோடியோ வணிகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம்ன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாயைத்திறக்காமல் இருக்கின்றனர். இதனால் இந்தியாவில் கோடிக்கணக்கான சிறு குறு தொழில் முனைவோர் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக நாமக்கல் மற்றும் ஈரோட்டில் முட்டை மற்றும் ஆயத்த ஆடைகளின் மூலம் வரும் வருவார் 12 கோடிவரை அப்படியே நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.