பாக்தாத், ஆக.13- ஈராக்கில் கடும் கோடை வெப்பம் காரணமாக மின்சாரத்துக்கான தேவை அதிகரித்ததால், நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஈராக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. இந்தக் கடும் வெப்பம் இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. மின்தடையைச் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மின்சார விநியோகம் எப்போது சீராகும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.
ஈராக்கில் கோடைக் காலங்களில் மின்தடை ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது மக்களைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி யுள்ளது. எனினும், பெரும் பாலான வீடுகளில் தனிப்பட்ட மின்சார ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த மின்தடையின் தாக்கம் ஓரளவுக்குக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, குளிர் சாதனப் பெட்டிகள் இயங்காததால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் அபாயம் ஏற்பட் டுள்ளது.