குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

லண்டன், ஆக.13- அதிகரித்து வரும் குடியேற் றத்தை தடுப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்ட வுடன், அவர்களின் மேல்முறையீடுகள் விசாரிக்கப்படுவதற்கு முன், அவர்களுடைய தாயகத்துக்கு நாடு கடத்தப்படும் பட்டியலில், இந்தியாவை பிரிட்டன் அரசு சேர்த்துள்ளது.

அய்ரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேல்முறையீட்டு விசாரணைக்காக அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பிரிட்டனில் வசிப்பவர்களின் குடியுரிமை பாதிக்கப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட வெளி நாட்டு குற்றவாளிகள், மேல்முறையீட்டு விசா ரணையை அவர்களது சொந்த நாட்டிலேயே மேற்கொள்ள பிரிட்டன் அரசு கடந்த 2023இல் புதிய வழிமுறையை மேற் கொண்டது.

‘இப்போது வெளி யேறுங்கள்; பின் மேல் முறையீடு செய் யுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ், அப்போதைய கன்சர் வேடிவ் கட்சி உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரவர்மேன், வெளிநாட்டு குற்றவாளிகளை அனுப்பி வைப்பதற்கான நாடுகளின் பட்டியலை உருவாக்கினார்.

இந்த பட்டியலில், பின்லாந்து, நைஜீரியா, எஸ்டோனியா, அல்பேனியா, பெலிஸ், மொரீஷியஸ், தான் சானியா மற்றும் கொசோவோ ஆகிய எட்டு நாடுகள் இடம் பெற்றிருந்தன.

23 நாடுகள் அந்த பட்டியல் தற்போது, 23 நாடுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவும் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளது.

அங்கோலா, ஆஸ்தி ரேலியா, போட்ஸ்வானா, புருனே, பல்கேரியா, கனடா, கயானா, இந்தோ னேஷியா, கென்யா, லாட்வியா, லெபனான், மலேஷியா, உகாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *