புதுடில்லி, ஆக.13- எதிர்க்கட்சி களின் அமளிக்கிடையே நாடாளு மன்றத்தில் 6 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இதையடுத்து,
18-ஆம் தேதி வரை சபை ஒத்தி வைக்கப் பட்டது.
நாடாளுமன்ற மக்களவை நேற்று (12.8.2025) கூடியபோது, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை எதிர்த்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை மக்களவை தலைவர் ஓம் பிர்லா அமைத்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோ தாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி வாரம் வரை பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது
காகிதங்கள் வீச்சு
மதிய இடைவெளிக்கு பிறகு சபை கூடியபோது, எதிர்க்கட்சி களின் அமளிக்கிடையே, இந்திய துறைமுகங்கள் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற் றப்பட்டது. துறைமுகம் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைப்பதும், துறைமுகத்தில் வர்த்தகத்தை எளிதாக்குவதும் இதன் நோக்கங்கள் ஆகும்.
ஒத்திவைப்புக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சபை மீண்டும் கூடியது. அப்போது, மக்களவைத் தலைவர் இருக்கையில் இருந்த பா.ஜனதா உறுப்பினர் ஜெகதாம்பிகா பாலை நோக்கி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து வீசினர்.
அவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் தூண்டி விட்டதாக ஜெகதாம்பிகா பால் குற்றம் சாட்டினார். மக்களவைத் தலைவரை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாகவும். மக்களவையின் கண்ணியத்தை சீர்குலைப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
பா.ஜனதா பல ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், இத்தகைய செயலில் ஈடுபட்டது இல்லை என்றும் அவர் கூறினார்.
மசோதாக்கள் நிறைவேற்றம்
பின்னர், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, சிறிது நேர விவாதத்துக்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
அதைத்தொடர்ந்து, திவால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவை விரிவான ஆய்வுக்காக தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி, மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
18-ஆம் தேதி கூடும்
அத்துடன், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்காக விடுமுறை விடப்படுகிறது. 18-ஆம் தேதி காலை சபை மீண்டும் கூடும்.
மாநிலங்களவையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்த ஒத்திவைப்புகளுக்கு பிறகு, பிற்பகல் 3 மணிக்கு சபை கூடியபோது, ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேசிய விளையாட் டுகள் மசோதா, தேசிய ஊக்க மருந்து தடுப்பு திருத்த மசோதா ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்தார்.
வெளிநடப்பு
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,வாக்காளர் பட்டியல். பிரச்சினையை எழுப்ப முயன்றார். அவர் சபை அலுவல் களை சீர்குலைப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார். அதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
நடப்பு கூட்டத்தொடரில் 64 மணி 25 நிமிட நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து விட்டதாக நட்டா கூறினார்.
பின்னர், மேற்கண்ட இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஏற்ெகனவே மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு இருப்பதால் இரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டன.
வருமானவரி மசோதா
அதைத்தொடர்ந்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட வருமான வரி மசோதா, வரிவிதிப்பு: சட்டங்கள் மசோதா ஆகிய 2 பண மசோதாக்களை தாக்கல் செய்தார்.
பழைய வருமானவரி சட்டத்தில் சில அம்சங்கள் காலாவதி ஆகி விட்டதால், புதிய மசோதா கொண்டு வரப்பட்டதாகவும், புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொள்ளாததற்காக அவர் எதிர்க்கட்சிகளுக்கு கண் டனம் தெரிவித்தார், பின்னர், திருத் தப்பட்ட வருமானவரி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. அது, மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.