சென்னை, ஆக. 13- சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (12.8.2025) நடைபெற்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஃபிடல் காஸ்ட்ரோ
ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற் றாண்டு விழாவில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை.
ஏகாதிபத்திய சதியை முறியடிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது.
அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை மீறி கியூபாவில் ஆட்சி நடத்தினார் ஃபிடல் காஸ்ட்ரோ.
இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பதற்கு ஒன்றிய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் பதில் கூறவில்லை.
அடிமைத் தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா?. இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. நான் தினந்தோறும் தீக்கதிர் படிக்கிறேன்.
கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டிக்காட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
கம்யூனிஸ்டுகள் எங்களில் பாதி, ஏனெனில் என்னுடைய பெயரே ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது.
நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.