பருவ மழை
கேரளா மற்றும் தென் தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி யுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
அங்கீகாரம்
பன்னாட்டு அளவில் உயிர்க் கோள மேலாண்மைக்கான யுனெஸ் கோவின் ‘மைக்கேல் பட்டீஸ் விருது’, இந்தியாவில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட் டத்தின் மன்னார் வளைகுடா உயிர்க் கோள காப்பக இயக்குநர் ஜகதீஷ் பகான் சுதாகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடல் வளப் பாதுகாப்பு பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என அவர் தெரிவித்துள்ளார்.
தள்ளி வைப்பு
சென்னை கடற்கரை – சேப் பாக்கம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையை 7 மாதங்களுக்கு ரத்து செய்யத் திட்ட மிட்டிருந்த நிலையில், தற்போது இந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு களில் காணாமல் போன 2,200 குழந் தைகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தகவல்.
திரும்பி…
ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ் தகவல்.