மத அராஜகத்தின் மறுபெயர் பா.ஜ.க.! சத்தீஸ்கரில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்திற்குள் புகுந்து பஜ்ரங் தளம் குண்டர்கள் தாக்குதல்

ராய்ப்பூர், ஆக. 12 பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 வாரத்தி ற்கு முன்பு மதமாற்றம் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பொய்க் குற்றச்சாட்டால் கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப் பட்டனர். இந்துத்துவா கும்பலான பஜ்ரங் தளம் புகாரின் அடிப்படை யில் சத்தீஸ்கர் அரசு இந்த நடவ டிக்கையை மேற்கொண்டது. சிபி எம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தீவிர சட்டப் போராட்டத்தால் கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

தாக்குதல்

இந்நிலையில், சத்தீஸ்கரில் மீண்டும் கிறிஸ்தவர்களுக்கு எதி ரான தாக்குதல் சம்பவம் அரங்கேறி யுள்ளது. ராய்ப்பூர் அருகே உள்ளது குகுர்பேடா. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிறன்று வழக்க மான கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற் குள் புகுந்த 100க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளம் பயங்கரவாத குண்டர் கள் “ஜெய் சிறீ ராம்” என முழக்கமிட்டு, பாதிரியார் உட்பட பிரார்த்த னைக் கூட்டத்தில் இருந்த அனைவ ரையும் கொடூரமாகத் தாக்கினர். காவல்துறையினர் முன்னிலையில் வன்முறை நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஒரு கிறிஸ்தவரின் வீட்டிற்கு பிரார்த்தனை செய்ய வந்தபோது தாக்குதல் நடந்ததாகவும், சத்தீ ஸ்கரில் மீண்டும் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக வும் தாக்குதலுக்கு உள்ளான பாதி ரியார் கூறினார். தேவாலயங்களை  இடிக்க மனு சத்தீஸ்கர் மாநிலம் பானு பிர தாப்பூர் பகுதியில் பழங்குடி கிராமங்களில் பாதிரியார்களை  தடை செய்ய வேண்டும் என்றும், தேவாலயங்களை இடிக்க வேண்டும் என்றும் கோரி ‘சனாதன் சமாஜ்’ இந்துத்துவா அமைப்பு ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளது. பானு பிரதாப்பூர் என்ற பகுதியில் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப் பட்டு ஆத்திரமூட்டும் பேரணி நடத் தப்பட்ட பின்னர் இந்த மனு மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *