விருத்தாசலம், ஆக.12- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம் விருத்தாசலத்தில் 9.8.2025 அன்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மறை மலைநகரில் அக்டோபர் 4 ஆம் நாள் திராவிடர் கழகம் சார்பில் நடை பெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டை விளக்கி 100 கூட்டங்கள் நடைபெறும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்தார். இதன்படி முதல் கட்ட கூட்டங்களில் ஒன்றாக விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விருத்தாசலம் கழக மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்று பேசினார். மாவட்டக் காப்பாளர் அ.இளங்கோவன் தலைமை உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் தங்க. இராசமாணிக்கம், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக, கழகச் சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். அப்போது, சுயமரியாதை இயக்கத்தின் சிறப்புகள் குறித்தும், மாநாட்டின் நோக்கம் மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
கூட்டத்தில், விருத் தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன், ஒன்றியச்செயலாளர் கா.குமரேசன், அசோக் குமார், இராஜசேகர், கா.அறிவழகன் கங்கை அமரன், இராகுல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தொடக் கத்தில் மாவட்ட இளை ஞரணித் தலைவர் செ. சிலம்பரசன் தலைமையில் இராஜராஜன் மீது பிரதமருக்கு அப்படி என்ன திடீர்த் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்? எனும் துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப் பட்டது. நகரச் செயலாளர் மு.முக மது பஷீர் நன்றி கூறினார்.