பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி-100 விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தருமபுரி, ஆக. 12- தருமபுரி பெரியார் மன்றத்தில் 9.8.2025 அன்று காலை 11 மணிக்கு கழக இளைஞரணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் எழுச்சியோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன், அனைவரையும் வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், நகரத் தலைவர் கரு.பாலன் முன்னிலை வகித்தனர்.

தனி வாகனம் ஏற்பாடு

மாவட்டத் தலைவர் கு.சரவணன் அக்டோபர் 4 செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெறுகின்ற சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு குடும்பம் குடும்பங்களாக 100க்கு மேற்பட்ட தோழர்களோடு தனி வாகனத்தில் சென்று கலந்து கொள்வதெனவும் தலைமை யுரையில் குறிப்பிட்டார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் தமிழர்களின் அறிவுக் கேடய மான விடுதலையின் சந்தாக்களை புதுப் பிப்பதும்,புதிய சந்தாக்களை பெறுவதும் நம்முடைய களப்பணியாக இருந்திட வேண்டும் என்கிற அடிப்படையில் 100 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்கிடு வோம் என்கிற கருத்தை பதிவு செய்தார்.

இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை கடவுள் மறுப்பு கூறியும், இளைஞரணி கட்டமைப்பு, ஒன்றியங்கள் தோறும் இளைஞரணி தோழர்களை வலுப்படுத்த வேண்டியும், தலைமைக் கழகம் வழங்கக்கூடிய துண்டறிக்கைகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்குதல், இளைஞரணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்பதனைக் கூறி தொடக்கவுரை ஆற்றினார்.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, இளைஞரணி கூட்டங்கள் மாதம் ஒருமுறை நடத்திடவும்,விடுதலை நாளிதழை இளைஞரணி தோழர்களிடம் பரப்பிட வேண்டியும், கழகக் கொள்கை கருத்து வாசகங்களை எளிய முறையில் முகநூல், வாட்சப் வாயிலாக பதிவிட வேண்டியும், சமூக காப்பணிக்கு இளைஞரணி தோழர்கள் பங்கேற்க வேண்டியும்,செப்டம்பர்-17 தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இளைஞரணி தோழர்கள் பிரம்மாண்ட விழா கொண்டாட வேண்டியும் நோக்க வுரையில் குறிப்பிட்டார்.

மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இயக்கத்தின் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொள்வது சிறப்பு, குறிப்பாக கலந்துரையாடல் கூட்டத்தில் உறுதியாக பொறுப்பாளர்களும், தோழர் களும் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும், இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு நம்முடைய பணி அமைந்திட வேண்டும் அது மிக சிறப்பு, குறிப்பாக சீருடையோடு அனைவரும் பங்குபெறுவது மிக மிக சிறப்பு என்று தனது கருத்துரையில் குறிப்பிட்டார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தீ.அன்பரசு அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நடத்துவதென தங்களின் கருத்தை பதிவு செய்தார்.

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், தமது உரையில் அறிவு ஆசான் தந்தை பெரியாரை உலகமயமாக்க வேண்டும் என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இருபத்துநான்கு மணி நேர சிந்தனையும் பெரியார் உலகம் ஒன்றே தான். அதன் தொடர்ச்சியும் நீட்சியும் எழுச்சிபெற வேண்டும் என்றால் வாய்ப்புள்ளவர்கள் ஒரு இலட்சம் வழங்குங்கள்,வாய்ப்பு சற்று குறைவாக உள்ளவர்கள் குடும்பங்களோடு இணைந்து ஒரு இலட்சமாக வழங்குங்கள் என்கின்ற விருப்பத்தின் வேண்டுகோளை தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பாக பத்து இலட்சம் ரூபாய் வழங்குவது என்றும், கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் தேதி பெற்று நிதி வழங்குவோம், ஒன்றிணைந்து களப்பணியாற்றி சிறப்பாக நடைமுறைப்படுத்துவோம் என்று குறிப்பிட்டார். மாவட்ட கழகத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரின் முன்னெடுப்பில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, விவசாய அணி, விடுதலை வாசகர் வட்டம் இணைந்து வெற்றிகரமாக்கிடுவோம் என்கிற உறுதியை எடுத்துக்கொண்டு செயலாற்றுவோம் என்று சிறப்புரையாற்றினார்.

கலந்து கொண்டவர்கள்:

மாவட்ட இளைஞரணித் தலைவர் மா.முனியப்பன், நகர செயலாளர் இர.பழனி, நகர இளைஞரணித் தலைவர் கண்.இராமச்சந்திரன், இளைஞரணி ரா.அம்ஜத் பாஷா, மாணவர் கழகம் வினித்குமார், மகளிரணி ஊமை.சிகா. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ், நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

பெரியார் உலகத்திற்கு பொது செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் மாவட்ட சார்பாக ரூ.10 இலட்சம் நிதி வழங்குவது என்று முடிவு செய்யப்படுகிறது.

செப்டம்பர்-17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை நாளிதழ் பழைய சந்தாவை புதுப்பித்தல் மற்றும் புதிய விடுதலை சந்தாக்களை சேர்த்து அதிக அளவில் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களை அழைத்து பேச்சுப்போட்டி நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் பங்கேற்கும் அக்டோபர்-04 செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு தர்மபுரி மாவட்டத்திலிருந்து 100 தோழர்களோடு பங்கேற்பது. மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து. மற்றும் விளம்பர பேனர் வைப்பது என முடிவுசெய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி தோழர்கள் தொடர்ச்சியாக துண்டறிக்கையை பரப்பும் பணியில் இணைத்து, கிளைக் கழகங்கள் உருவாக்குவது, கழக இளைஞரணி கட்டமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *