கீழப்பாவூர், ஆக. 11- பொதுக்குழு உறுப்பினர்அய்.இராமச்சந்திரன் தலைமையில் சுயமரியாதைச் சுடரொளி கீழப்பாவூர் பி.பொன்ராஜ் படத்திறப்பு – தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மாவட்டக் துணைச் செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், கீழப்பாவூர் தலைவர் இராமசாமி, தொழில் வல்லுநர் பி.ஆர்.கே.அருண் ஆகியோர் முன்னிலையில் 10.8.2025 அன்று காலை 11 மணிக்கு கீழப்பாவூர் பெரியார் திடலில் நடைபெற்றது.
கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் பொன்ராஜ் அவர்களின் கொள்கை உறுதியை அனைவரும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் பொன்ராஜ் அவர்களின் தனித்தன்மையை, பெரியார் தொண்டர்களின் போர்க்குணத்தையும் நம்மையெல்லாம் வழிநடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா பேருழைப்பை விளக்கியும் சிறப்பாக உரையாற்றினார்.