சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து 2016 ஜூலை முதல் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தமிழர் தலைவர்

2 Min Read

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சமஸ்கிருதத் திணிப்பு என்பது அதி தீவிரமாக நடந்துகொண்டுள்ளது. அரசின் பணம் கோடிக்கணக்கில் வாரி இறைக்கப்படுகிறது. கல்வியைச் காவிமயமாக்கும் திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பை முதன்மைப்படுத்துகிறார்கள்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இருந்த ஜெர்மன் மொழியை நீக்கி விட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தைத் திணித்து விட்டனர்.

சமஸ்கிருத வாரம் என்றே கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் ஹிந்தி – சமஸ்கிருத பெயர்கள்தாம்.

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பில் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் ஆரிய சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து ஜூலை முதல் தேதி வெள்ளியன்று மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், கழகப் பொறுப்பாளர்கள் – ஆதரவாளர்களோடு, தோழர்கள் களம் காண ஆயுத்தமாகுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை     
23.6.2016      

 

 

மருத்துவக் கல்வியிலும்
மூக்கை நுழைப்பு?

மின்சாரம்

மருத்துவக் கல்வி முடிக்கும் மாணவர்கள் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி எடுப்பது என்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வந்த ஒன்றாகும்.

ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு, அதற்கு மாற்றாக சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சாபக் என்ற புது உறுதி மொழியைத் திணிக்க தேசிய மருத்துவக் கவுன்சில் மூலம் பரிந்துரைத்துள்ளது.

அதனைக் கண்டித்து 19.2.2022 அன்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார்.

ஏமாளிகள் எவராயினும் அவரிடம் பரிவும் அக்கறையும் பாகுபாடின்றி மனிதநேயத்துடன் மருத்துவம் செய்ய உறுதி ஏற்கும் ஹிப்போகிரேட்டிக் உறுதி மொழியை நீக்கி விட்டு, அந்த இடத்தில் விதவைகளுக்கும், அரசனால் வெறுக்கப்படும் மக்களுக்கும் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று மனிதநேயமற்ற முறையிலும் மருத்துவ அறத்துக்கே முரணாக பேதம் பார்க்க வலியுறுத்தும் ஆயுர்வேத மருத்துவத்தின் ஷராக் சம்ஹிதைகள் காட்டும் உறுதிமொழியை ஏற்பதா?

பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் ஷேமகரமான உறுதிமொழி இது அல்லவா? என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இதன் விளைவு என்ன தெரியுமா?

2022 பிப்ரவரி 21ஆம் தேதி ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யாவுடன் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் கலந்துரையாடலின் போது, ஹிப்போரேட்டிக் உறுதி மொழிக்கு மாற்றாக ‘ஷராக் ஷாபத்’ கட்டாயப்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த மாற்றத்தைத் திராவிட மாடல் அரசும் எற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *