சென்னை, ஆக.11 ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பதிவில்,
‘‘தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன.
ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துகிறது. இதில் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
* ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.
* அரசியல் ரீதியாக நீக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,
* ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. பாஜக பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாய கத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.