கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.6.2023
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அத்வானியின் ரதத்தை லாலு தடுத்தார், மோடியை நிதிஷ் குமார் தடுப்பார் என தேஜஸ்வி கருத்து.
* தனி பட்ஜெட் நடைமுறையை நிறுத்துவதன் மூலம் ரயில்வேயை பாஜக அழித்துவிட்டது ரயில் விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையை அடக்குவதில் ஒன்றிய பாஜக அரசு மும்முரமாக இருப்பதாக மம்தா குற்றச்சாட்டு.
* ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் பற்றிய அத்தியாயம் கருநாடக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் மது பங்காரப்பா தலைமையில் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கூட்டத்தில் முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* துருக்கி தேர்தல் கூறும் செய்தி. இந்தியாவில் எதிர்க்கட்சிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியை வழங்குவதற்கான ஒரு கட்டாயத் திட்டத்திற்கு பின்னால் ஒன்றுபட முடியாவிட்டால், 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபியை அகற்றுவதற்கான வாய்ப்பு கடினமாகும் என்கிறார் லண்டன் நகரை சேர்ந்த ரமேஷ் வெங்கட்ராமன்
தி இந்து:
* மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு செங்கோல் கொடுத்ததில் என்ன பயன்? எல்லா அதிகாரங்களையும் ஒப்படைத்துவிட்டு அவர் இந்தியாவை விட்டு வெளி யேறினார் என்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை மடத்தின் ஆதீனம் பேச்சு
தி டெலிகிராப்:
* தன்னைச் சந்தித்த ஓபிசி, சிறுபான்மை, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களின் தலைவர்கள் குழுவிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும், சமூக-பொருளா தார மற்றும் கல்வி கணக்கெடுப்பை அமல்படுத்தவும் தனது அரசு உறுதியாக இருப்பதாக கருநாடக மாநில முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
* பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க மனுஸ்மிருதியை – குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி மேற்கோள் காட்டி தீர்ப்பு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மருத்துவ முதுநிலை படிப்பில் சேர அடுத்த ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வை எம்.பி.பி.எஸ். மாணவர்கள் எழுத வேண்டுமாம்
– குடந்தை கருணா