சோழிங்கநல்லூர், ஆக. 10– சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கூட்டம் 3.8.2025 அன்று மாவட் டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் காப்பாளர் நீலாங் கரை ஆர் டி வீரபத்திரன், செயலாளர் விஜய் உத்தமன் ராஜ் ஆகியோர் முன்னிலையில் மகளிர் அணி தலைவி தேவி சக்திவேல் வரவேற்புரையுடன் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் அவர்கள் கலந்துகொண்டு கூட்டத்தின் நோக்க உரையாக வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக மாநில மாநாடு சிறப்பாக நடைபெற மாவட்ட கழகத் தோழர்கள் திர ளான நன்கொடைகளை திரட்டி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மாநாடு நடைபெறுவதையொட்டி பொம்மலாட்ட தெருமுனை பிரச்சார கூட்டத்தை தலைமை அறி வித்துள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சுவரெழுத்து பிரச்சாரம் சிறப்புடன் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
நிறைவாக துணைத் தலைவர் தமிழ் இனியன் நன்றி கூற முடிவடைந்தது.
கலந்து கொண்ட தோழர்கள்
ப.க.தலைவர் பி சி ஜெயராமன், மாநில ப.க. துணைத் தலைவர் சண்முகசுந்தரம், தொழிலாளர் அணி மணிகண்டன், தேவி சக்திவேல், ஏர்போர்ட் சரவணகுமார், அ.பா.கருணாகரன் – பொதுக்குழு உறுப்பினர், செங்கல்பட்டு ப.க. தலைவர் சகாயராஜ், குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.