சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பரப்புரை பெருமழை கூட்டம் திருவையாறு ஒன்றியம் – பேரூர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

3 Min Read

ராயம்பேட்டை, ஆக. 10– திருவையாறு ஒன்றியம், பேரூர் கழகத்தின் சார்பில் 8.8.2025 மாலை 6 மணி அளவில் ராயம்பேட்டை ஆ.கவுதமன் (பேரூர் கழக தலைவர்) இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணித் தலைவர் இரா.பாலசுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் ச.கண்ணன் ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அக்டோபர் 4 2025 செங்கல்பட்டு – மறைமலை நகரில்  நடைபெற உள்ள, தலைமைக்கழகத்தால் அறிவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க நூறு பரப்புரை பெருமழை கூட்டங்களில் ஒன்றாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்து கொள்ளும் கூட்டத்தினை திருவையாறு தேரடியில் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

செங்கல்பட்டில் நடைபெறும் மாநாட்டிற்கு ஒன்றியத்தின் சார்பில் பெருமளவில் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாமன்னன் கரிகால் பெருவளத்தான்  விழாவினை இரண்டாவது முறையாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து சிறப்பாக  நடத்திட அனுமதி அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியை இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாளில் ஒன்றியம் முழுவதும் கழகக் கொடி ஏற்றியும், தந்தை பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி திரட்டி தருவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை நாளிதழுக்கு புதிதாக சந்தா சேர்த்தும் சந்தா முடிந்தவர்களுக்கு புதுப்பித்தும் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அன்பழகன் நன்றி கூறிட இரவு எட்டு மணி அளவில் கலந்துரையால் கூட்டம் நிறைவுற்றது.

அரியலூரில் ப. க. சார்பில் நடைபெற்ற நூல்கள் ஆய்வரங்கம்

அரியலூர், ஆக. 10– அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நூல்கள் ஆய்வரங்கம் நிகழ்ச்சி 2.8.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கி அரியலூர் கோவை கிருஷ்ணா இனிப்பக அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி தலைமையேற்க, அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.நடராஜன் வரவேற்புரையாற்றினார். பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ. நடராஜன் தொடக்க உரையாற்றினார். அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் அரியலூர் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி. தங்கராசு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர்மு. விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி பொதுச் செயலாளர் வா .தமிழ் பிரபாகரன் , பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற நூலினை அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.ஜெயராஜ் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விளக்கியும்,எழுத்தாளர் வி.சி. வில்வம் தொகுத்த “கொள்கை வீராங்கனைகள்” என்ற நூலினை ஆய்வு செய்தபேராசிரியர் இ.வளனறிவுதிராவிடர் கழக மகளிரின் சிறப்புகளையும் வீரத்தினையும் விவரித்தும்முனைவர் துரை. சந்திரசேகரன் எழுதிய “மனித உரிமை காவலர் தந்தை பெரியார்” என்ற நூலினை பேராசிரியர் ராஜா.கென்னடியும் ஆய்வு செய்து மிகச்சிறப்பான உரைகளை நிகழ்த்தினர். அரியலூர் மாவட்ட ப.க.து.செயலாளர் ஆ.ரவி நன்றி கூறினார். கொள்கை வீராங்கனைகள் நூலில் இடம் பெற்றுள்ள இந்திராகாந்தி அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. ஏறக்குறைய ரூபாய் பத்தாயிரத்திற்கு நூல்கள் விற்பனையானது.

இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சி. காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் க. கார்த்திகேயன் , மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் வி.சிவசக்தி, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, வழக்கறிஞர் வேலவன், மாவட்ட இ.அ.தலைவர்லெ.தமிழரசன், மா.இ.அ.து.செயலாளர் மறவனூர் ப.மதியழகன், மகளிரணி பொறுப்பாளர்கள் ஜோதிமணி ,பரமேஸ்வரி, இந்திரா காந்தி, மணப்பத்தூர் கலைமணி, செந்துறைஒன்றிய துணைச் செயலாளர் குழுமூர் சுப்பராயன், ஆத்தூர் மாவட்ட ப.க.தலைவர் முருகானந்தம், பகுத்தறிவாளன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர், செயலாளர் ஆ. இளவழகன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக்குமார், அரியலூர் நல்லப்பன், வைரவேல், ஒன்றிய செயலாளர் த.செந்தில்,  தர்மா உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *