நாகர்கோவில், ஆக. 10– குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் ஓழுகினசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் எஸ்.சுந்தரம், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், , மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார், கழக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.குமார தாஸ்கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, குமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், தோழர்கள் எ.ச.காந்தி, இரா. முகிலன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், கல்வி வள்ளல் காமராசர் பேசிய பகுத்தறிவு சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கை கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.