மின்சாரம்

3 Min Read

சமஸ்கிருதம்
ஒரு செயற்கைக் கலவையே

ஆரியர்களின் மொழியாகிய சமசுகிருதம் கங்கை நாட்டில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் உருவாகிக் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி.

சமசுகிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி. சமசுகிருதத்தில் புத்தர், அசோகன் கால இலக்கியம் இல்லை.

அசோகன் காலத்தில் பிராகிருத வகைகளே இருந்தன. அவனும் அவனுக்கு முன்பு புத்தரும் பேசிய பாலியும் மகாவீரர் பேசிய அர்த்தமாகதியும் அவற்றுட்பட்டவையே. சமசுகிருத இலக்கியம் தமிழ்ச் சங்க கால இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் மிகவும் பிற்பட்டது.

சமசுகிருதமும், பாணினிக்கும் பிற்பட்ட காலத்துப் புராண இதிகாச மொழியும், அதற்கு முற்பட்ட வேதமொழியும், தொடர்புடையவை யானாலும் வெவ்வேறு. இம்மூன்றையும் சமசுகிருதம் என்னும் ஒரே பெயரால் வழங்குவதன் மூலம் ‘அது தமிழையொத்த பழைமையும் இலக்கியப் பண்பும் மக்கட் சமயச் சார்புடைமையும் பெற்றது’ என 2000 ஆண்டுகளாக ஆரியர்களால் உலகை நம்ப வைக்க முடிகிறது.

சமசுகிருதம் இலக்கிய மொழியான போதே வழக்கிழந்த மொழியாயிற்று; அதற்கு முன் அது பேச்சு மொழியாய் இருந்தது. அப்பேச்சு மொழிச் சமசுகிருதம் உருவான காலத்தில் ஆரியர்கள் நாடோடிகள். இவ் வாழ்வின் சின்னத்தைச் சமசுகிருதம் இன்னுந் தாங்கிக் கிடக்கிறது. அதில் இன்னும் நாட்டுப் பெயர்கள் உயர்திணைப் பன்மைப் பெயர்களே. அதாவது, பாண்டிய நாடு என்பது சமசுகிருதத்தில் பாண்டியர்கள் எனப்படுகிறது. இராமன் கோசலத்திலிருந்து விதேகத் துக்குச் சென்றான் என்பதன் சமசுகிருதப் பாணி இராமன் கோசலத்தாரிடமிருந்து விதேகத்தாரிடம் சென்றான் என்பதே. அன்று அவர்களது நாடு, வீடுந்தெருவும் ஊரும் உடைய நாடல்ல, நாடோடிக் கும்பல்களாகத் திரண்டு இடத்துக்கிடஞ் சென்ற ஒரு மந்தையாகவே இருந்தது என்பதை இது காட்டுகிறது.

(ஆதாரம்; பன்மொழிப் புலவர் அறிஞர் கா.அப்பாதுரை எழுதிய ‘சரித்திரம் பேசுகிறது’ என்னும் நூல் பக்.138-144)

சமஸ்கிருதத் திணிப்பு: கோபால்சாமி அய்யங்கார் என்ன சொல்லுகிறார்?

“10 ஆண்டுகளுக்கான சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு என கோபால்சாமி குழு கொடுத்துள்ள அறிக்கையின் ஒரு துளி:

1 சமஸ்கிருத்தை பள்ளிகளில் கற்பிக்கும்போது ஆசிரியர் சமஸ்கிருத்திலேயே பேசவேண்டும். மாணவர் களுக்கு சமஸ்கிருதத்தில் பேசி அதற்கான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும்.

2 பள்ளிக்கூடத்தில் வகுப்பறை, ஆய்வு அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்

  1. மாணவர்கள் பள்ளிகள் மட்டுமல்லாது வெளி யிடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்.
  2. சமஸ்கிருதம் பேசுவதை கேலிசெய்தால் அதற்காக கோபப்படாமல் சமஸ்கிருத்தை தொடர்ந்து பேசவேண்டும் (சந்தேகமோ!)
  3. பொதுவிடங்களில் முக்கிய பொருள் குறித்து விவாதிக்கும்போதுசமஸ்கிருதத்திலேயே பேசவேண்டும்
  4. சிறு சிறு குறிப்புகளை சமஸ்கிருதத்தில் எழுதப் பழகவேண்டும்.

7.பொதுவிடங்களில்(வங்கி, பேருந்து, பூங்கா) சமஸ் கிருதத்திலேயே உரையாடி அதற்கான விளக்கத்தை பிற மொழியில் கூறவேண்டும்.

8.எந்த ஒரு விண்ணப்பத்தையும் சமஸ்கிருதத்தில் தந்து அதற்கான விளக்கத்தை பொது மொழியில் தரவேண்டும்.

அறிக்கை இருக்கட்டும். இந்த மொழியை எந்தப் பார்ப்பனர் வீட்டில் பேசிக் கொண்டிருக் கிறார்கள். கருமாதித் துறையில்தான் சமஸ்கிருதம் விசேஷமாக ஒலிக்கப்படுகிறது.

அர்த்தம் புரியாமல் கல்யாண வீட்டில் கருமாதி மந்திரங்களைச் சொன்ன புரோகிதப் பார்ப்பனர் களும் உண்டு.

இந்தக் கருமாதி மொழியைத் திணிக்கத்தான் ஆரிய பார்ப்பன ஆட்சி பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.”

மக்கள் மத்தியில் இதனைத் தோலுரிக்க 2016 ஜூலை முதல் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *