புதுடில்லி, ஆக.9- மக்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய பழங்குடியினர் விவகார இணை அமைச்சர் துர்காதாஸ் கூறியதாவது:-
பழங்குடியின குழந்தை களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக ‘ஏகலைவா மாதிரி உள்ளுறை பள்ளி கள்’ இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளில், கடந்த 2021-2022 கல்வியாண்டில், 111 மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தினர்.
ஆனால், 2024-2025 கல்வியாண்டில், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்தது. அதாவது 5 மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.