சத்தீஸ்கரை தொடர்ந்து பாஜக ஆளும் ஒடிசாவிலும் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் 70க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளம் குண்டர்கள் அட்டூழியம்!

3 Min Read

ஜூலேஸ்வர், ஆக.9 மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறு பான்மையினர் மீதான தாக்குதல் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.

 கன்னியாஸ்திரிகள் கைது

கடந்த வாரம் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் பகுதியில் ஆள்கடத்தல், கட்டாய மதமாற்றம் குற்றச்சாட்டில் கேரளா வைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தளத்தின் தூண்டுதல் காரணமாக சத்தீஸ்கர் காவல்துறை இந்த சம்பவத்தை அரங்கேற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தீவிர சட்டப் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம்  எழுதினார். இதன் விளைவாக அப்பாவி  கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழு வதும் கண்டனங்கள் குவிந்தன.

ஒடிசா வசம்

இந்நிலையில், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஒடிசாவிலும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மீதும் பஜ்ரங் தளம்  இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் அருகே கங்காதர் கிராமத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒரு  இரங்கல் பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு கங்காதர் தேவாலயம் மற்றும் பாலசோர் மறைமாவட்டத் தின் சார்பில் கத்தோலிக்க பாதிரியார்கள், 2 கன்னியாஸ்திரிகள், ஒரு கிறிஸ்தவ போதகர் உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.  இரங்கல் நிகழ்ச்சியை முடித்த பின்பு இரவு 9 மணியளவில் கங்காதர் கிராமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு குறுகிய காட்டுப் பாதையில் குவிந்து இருந்த சுமார் 70 பஜ்ரங் தளம் குண்டர்கள் 2 பாதிரியார்கள், 2 கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ போதகர் என 5 பேர் மீதும் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இந்துத்துவா  கும்பலிடம், “பாதிரியார்கள், கன்னியாஸ்திரி கள் பிரார்த் தனைக்காக அழைக்கப்பட்ட வர்கள்” என தெளிவுபடுத்தி மன்றாடிய போதும் பஜ்ரங் தளம் குண்டர்கள் தாக்குதலை நிறுத்த வில்லை. பின்னர் 45 நிமிடங்களுக்குப் பின் வந்த காவல்துறையினர் 5 பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கிறிஸ்தவ போதகர் லிஜோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகை யில்,”சுமார் 70க்கும்  மேற்பட்ட பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா கும்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. நாங்கள் வந்த இருசக்கர வாக னத்தையும் அடித்து நொறுக்கினர். குறிப்பாக ஊடகவியாளர் முன்னிலையில் எங்களை உடல்  ரீதியாக தாக்கினர். மேலும் “பிஜேடி (பிஜு  ஜனதா தளம்) ஆட்சி  நாட்கள் முடிந்து விட்டன. இப்போது பாஜக ஆட்சி. இனி நீங்கள்  யாரையும் கிறிஸ்தவர்களாக உருவாக்க முடி யாது” என்று கூறிக்கொண்டே தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தினர். எங்களது செல்பேசிகளை பறித்துச் சென்றனர். காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்த பின்பும் எங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தது” என அவர் கூறினார். சத்தீஸ்கரை தொடர்ந்து ஒடிஷாவிலும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளன.

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு

 தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து பெட்டகம்

திருப்பூர், ஆக. 9 உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலகம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். மேலும், விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார்.

இதில் பிறப்பு எடை குறைவாக உள்ள 50 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வழங்கினார். பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆயிரம் நாட்கள் கங்காரு முறை பராமரிப்பு, குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதை பற்றியும் விளக்கமாக டாக்டர் சியாமளா கவுரி எடுத்து கூறினார்.

விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் அனைத்து குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *