2017இல் ஒம்மாமுவா(Ommamua) என்கின்ற ஓர் அந்நிய விண்பொருள் நம் சூரியக் குடும்பத்துக்குள் உள்ளே நுழைந்தது. அதாவது நம்ம சூரியக் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து உள்ளே நுழைந்தது.
இதே போல மற்றுமொன்றும் வந்து கடந்து சென்றது. அது 2019இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு போரிசோவ் (Borisov) என பெயரிட்டுள்ளனர்.
தற்போது மூன்றாவதாக ஒரு பொருள் நம் சூரியக் குடுப்பத்தில் வந்து நுழைந்திருக்கிறது.
(படத்தில் வட்டமிட்ட இடத்தில் மிகவும் வெளிச்சமாக தெரிவது தான் 3iAtlas)
இந்த மூன்றாவது பொருள் இதற்கு முன் வந்த பொருள்களின் அளவைவிட பன்மடங்கு பெரியது என அறிவியலர் குறிப்பிட்டுள்ளனர். நாசாவின் அட்லஸ் தொலைநோக்கி உதவியுடன் வியாழன் கோளை ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சிறிய துகள் போன்ற ஓர் உருவம் இந்தக் கோளின் சுற்றுவட்டப் பாதையை கடந்து சென்றுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பொருளின் பயணத்தைக் கணக்கிடும் பொழுது, இது நம் சூரியக் குடும்பத்தில் இல்லாத ஒன்றாக இருக்கிறது என கண்டுபிடித்தனர்.
கடந்த ஜூலை 3ஆம் தேதி Minor Planet Centre என்கின்ற ஆய்வகத்தில் இது ஓர் அந்நிய விண்பொருள் என்று உறுதிபடுத்தியுள்ளனர். இதன் பெயர் 3iAtlas எனப் பெயரிடுள்ளனர். ஏனென்றால், இந்த விண்பொருள் மூன்றாவது சூரிய மண்டலத்தில் அல்லாத ஒரு பொருள் என்றும், இதை Atlas Telescope உதவி கொண்டு கண்டுபிடித்ததால் இந்தப் பெயர் வைத்துள்ளனர்.
இதை எப்படி நம் சூரியக்குடும்பத்தில் இல்லாத ஒன்று என கண்டுபிடித்தனர்?
அனைத்துத் கோள்களும் சூரியனைச் சுற்றி வரும். அனைத்து விண்வெளிப் பொருட்களும் அதனுடைய சுற்றுப் பாதையை வைத்திருக்கும். அந்த பாதையை விட்டு விலகாது. ஒன்றுடன் ஒன்று மோதினால் மட்டுமே விலகும். அப்படி மோதியது சுக்கு நூறாக உடையும் அல்லது அருகில் உள்ள பெரிய பொருளின் ஈர்ப்பினால் ஈர்க்கப்பட்டு அதன் மீது விழும். இப்படித்தான் சில விண்கற்கள் அதன் சுற்றுவட்டப் பாதையை விட்டு நகரும்போது நம் புவியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு எரிகற்களாக மாறிவிடும். அதை வைத்துப் பார்க்கும்பொழுது இந்தப் பொருளின் சுற்றுவட்டப் பாதை நம் சூரியக் குடும்பத்திற்கு அப்பாற்பட்டிருப்பதால் இவை வேறு ஓர் இடத்திலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மணிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் இது பயணிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இவ்வளவு வேகமாக பயணம் செய்யும் ஒரு பொருள் நம் சூரியக் குடும்பத்தில் இல்லை. இந்தப் பொருள் நம் சூரியக் குடும்பம் உருவாவதற்கு முன் உண்டான பொருளாக இருக்கலாம். அதுவும் இதன் வயது சுமார் 700-800 கோடி வருடங்கள் இருக்கும் என அறிவியலர் கணித்துள்ளனர். இது பால்வெளி மண்டலத்தின் மய்யப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
மிகவும் பழைமையான ஒரு பொருளை இதுவரை மனிதகுலம் கண்டறிந்துள்ளது என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். இதுவும் வால்நட்சத்திர வகையைச் சார்ந்ததுதான் எனக் கூறியுள்ளனர். வருகிற அக்டோபர் 30ஆம் தேதி செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதையைக் கடக்கும். இதனால் பூமிக்கு எந்தவொரு ஆபத்துமில்லை எனக் கூறியுள்ளனர்.
இதில் வேற்றுகிரக வாசிகள் உள்ளனரா? அவர்களின் பறக்கும் தட்டா? என செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதையைக் கடக்கும்போதுதான் தெரியும். இன்னும் தெளிவாக அந்தப் பொருளை நாம் காண முடியும்.
என்னைப் பொறுத்தவரையில்… “இதன் வேகம் குறையவில்லை, எங்கும் நின்றதில்லை என்பதை அறிவி யலாளர்கள் உறுதிப்படுத்தியதால், இது ஓர் ஏலியனின் விண்கலம் (வேற்றுக் கிரகவாசிகள் விண்கலம்) எனக் கூற வாய்ப்பில்லை. இதன் பாதையைக் கணக்கிட்டால் அது செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து சூரியக் குடும்பத்தையும் கடந்து சென்றுவிடும்.