️சத்தீஸ்கர், ஆக.8 சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செயல்பட்டுவருகிறது சிறீம்சர் என்ற தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்த மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் தீடிரென ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த மருத்துவப் பயன் பெற வந்த நபர்களிடம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்துள்ளனர்.
இதில் அவர்கள் முன்னுக்கு பின் தகவல்களை தெரிவித்தனர் இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அங்கு இருந்த மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களும் வாய்க்கு வந்தபடி உளறினர். இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்த மோசடியும் அம்பலம் ஆனது சிறீம்சர் மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நாள் அன்று கிராம மக்களை மருத்துவப் பயன் பெற வந்த நபர்களை போல நடிக்க வைத்து ஏமாற்றிவந்தது தெரியவந்தது.
இதன்படி காலையில் அந்த கல்லூரியின் வாகனம் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அங்கு கிராம மக்களிடம் ஒரு நாள் மருத்துவப் பயனாளிகள் போல நடித்தால் 150 ரூபாய் தருவதாக குறி அழைத்து வரப்படுவர் பின்னர் அவர்களை மருத்துவப் பயனாளிகள் போல படுக்கைகளில் படுக்கவைத்து அதிகாரிகளை ஏமாற்றிவிடுவது பழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் அந்த மருத்துவக் கல் லூரியில் போதிய மருத்து வர்கள் இல்லாத நிலையிலும் இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் முழு நேர மருத்துவர்களாகவும் நடிக்க வைத்துள்ளார். பொதுவாக ஒரு மருத்துவக் கல்லூரி செயல்படவேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக மருத்துவமனை இருக்கவேண்டும். மருத்துவக்கல்லூரி மாணவர் களுக்கு ஏற்றவாறு மருத்துவ மனையில் பயனாளிகளுக்கான படுக்கைகளும் இருக்க வேண்டும் மேலும் அதில் மருத்துவப் பயனாளிகள் இருந்தால் மட்டுமே அந்த மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் மருத்துவப் பயனாளிகள் இல்லாத பட்சத்தில் இந்த மோசடி வேலைகளில் தனியார் மருத்துவகல்லூரிகள் ஈடுபட்டு வருகின்றன.