அரியலூர், ஜூலை 8- அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நூல்கள் ஆய்வரங்கம் நிகழ்ச்சி 2.8.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கி அரியலூர் கோவை கிருஷ்ணா இனிப்பக அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி தலைமையேற்க, அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.நடராஜன் வரவேற்புரையாற்றினார். பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ. நடராஜன் தொடக்க உரையாற்றினார். அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் அரியலூர் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி. தங்கராசு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மு. விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி பொதுச் செயலாளர் வா .தமிழ் பிரபாகரன் , பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை20 20 எனும் மதயானை” என்ற நூலினை அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு. ஜெயராஜ் புதிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை விளக்கியும்,எழுத்தாளர் வி.சி. வில்வம் தொகுத்த “கொள்கை வீராங்கனைகள்” என்ற நூலினை ஆய்வு செய்தபேராசிரியர் இ.வளனறிவுதிராவிடர் கழக மகளிரின் சிறப்புகளையும் வீரத்தினையும் விவரித்தும்முனைவர் துரை. சந்திரசேகரன் எழுதிய “மனித உரிமை காவலர் தந்தை பெரியார்” என்ற நூலினை பேராசிரியர் ராஜா.கென்னடியும் ஆய்வு செய்து மிகச்சிறப்பான உரைகளை நிகழ்த்தினர். அரியலூர் மாவட்ட ப.க.து.செயலாளர் ஆ.ரவி நன்றி கூறினார். கொள்கை வீராங்கனைகள் நூலில் இடம் பெற்றுள்ள இந்திராகாந்தி அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. ஏறக்குறைய ரூபாய் பத்தாயிரத்திற்கு நூல்கள் விற்பனையானது. அனைவருக்கும் தேநீர் உணவு வழங்கப்பட்டது.
பங்கேற்றோர்
மாவட்ட காப்பாளர் சி. காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் க. கார்த்திகேயன், மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் வி.சிவசக்தி, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, வழக்குரைஞர் வேலவன், மாவட்ட இ.அ.தலைவர்லெ.தமிழரசன், மா.இ.அ.து.செயலாளர் மறவனூர் ப.மதியழகன், மகளிரணி பொறுப்பாளர்கள் ஜோதிமணி ,பரமேஸ்வரி, இந்திரா காந்தி, மணப்பத்தூர் கலைமணி, செந்துறைஒன்றிய துணைச் செயலாளர் குழுமூர் சுப்பராயன், ஆத்தூர் மாவட்ட ப.க.தலைவர் முருகானந்தம், பகுத்தறிவாளன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், செயலாளர் ஆ. இளவழகன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக்குமார், அரியலூர் நல்லப்பன், வைரவேல், ஒன்றிய செயலாளர் த.செந்தில், தர்மா உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.