இலங்கை மேனாள் அதிபர் ராஜபக்சேவின் மருமகன் சசீந்திர ராஜபக்சே ஊழல் வழக்கில் கைது

1 Min Read

கொழும்பு, ஆக. 8- இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக் சேவின் மருமகன் சசீந்திர ராஜபக்சே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார். இவர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்

ஊழல் குற்றச்சட்டு

இலங்கையில்  2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கை இடதுசாரி கட்சி பெருவாரியான வெற்றி பெற்று அதன் தலைவரான அனுர குமார திஸ்ஸநாயக தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்தது.. புதிய அரசு அமைந்த பிறகு, ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் ராஜபக்சே குடும்ப உறுப்பினர் இவரே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, சசீந்திர ராஜபக்சே போலியான ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் பணத்தை அரசிடமிருந்து இழப்பீடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் அரசாங்க நிலத்தில் அமைந்திருந்ததால், அரசு நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது.

கைது

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் சசீந்திர ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். சசீந்திரவின் உறவினர்களும், மகிந்த ராஜபக்சவின் மகன்களுமான நமல் மற்றும் யோஷித்தா ராஜபக்சே ஆகியோர் ஏற்கனவே பண மோசடி வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சே மற்றும் அவரது மனைவி மீதும் ஊழல் வழக்கு நடைபெற்றுவது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *