கொழும்பு, ஆக. 8- இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக் சேவின் மருமகன் சசீந்திர ராஜபக்சே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார். இவர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்
ஊழல் குற்றச்சட்டு
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கை இடதுசாரி கட்சி பெருவாரியான வெற்றி பெற்று அதன் தலைவரான அனுர குமார திஸ்ஸநாயக தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்தது.. புதிய அரசு அமைந்த பிறகு, ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் ராஜபக்சே குடும்ப உறுப்பினர் இவரே.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, சசீந்திர ராஜபக்சே போலியான ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் பணத்தை அரசிடமிருந்து இழப்பீடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் அரசாங்க நிலத்தில் அமைந்திருந்ததால், அரசு நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாகக் கூறப்படுகிறது.
கைது
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் சசீந்திர ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். சசீந்திரவின் உறவினர்களும், மகிந்த ராஜபக்சவின் மகன்களுமான நமல் மற்றும் யோஷித்தா ராஜபக்சே ஆகியோர் ஏற்கனவே பண மோசடி வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சே மற்றும் அவரது மனைவி மீதும் ஊழல் வழக்கு நடைபெற்றுவது குறிப்பிடத்தக்கது.