அரூர், ஆக. 8- அரூர் கழக மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வேப்பிலைப்பட்டி த.முருகம்மாளின் தாயாரும், அரூர் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வனின் மாமியாருமான சின்னம்மாள்( 82) உடல் நலகுறைவால் அறுவை சிகிச்சை செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி
1.8.2025 அன்று காலை 5 மணி அளவில் மறை வுற்றார்.
மறைவுற்ற சின்னம்மாள் உடல் வேப் பிலைப்பட்டி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம் சார்பில், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந் திரன், மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணா நிதி, மேனாள் மாவட்ட தலைவர் வீ சிவாஜி,
பொதுக்குழு உறுப் பினர் கதிர், தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கதிர்செந்தில், தருமபுரி மாவட்ட மகளிர் அணி தலைவர் நளினி, அரூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, செயலாளர் பெ. உமா, மகளிர் பாசறை தலைவர் பெ.கல்பனா, அமைப்பாளர் வேளாங் கண்ணி, தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்ன ராஜ், செயலாளர் ம. சுதா, தருமபுரி நகர அமைப்பாளர் இராமச் சந்திரன், தருமபுரி பெரியார் படிப்பக உதவி யாளர் அருணா, மாரவாடி அசோக் குமார், அரூர் மாவட்ட கழக காப்பாளர் தனசேகரன்,
பொதுக்குழு உறுப் பினர் இளங்கோ, மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ் திலீபன், கடத்தூர் ஒன்றிய தலைவர் பெ. சிவலிங்கம், கடத்தூர் நகர தலைவர் நெடுமிடல், கோ.தனசேகரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ. நடராஜன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மூ. சிவகுமார், செயலாளர் சொ. பாண்டியன், அரூர் விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் கவிஞர் பிரேம் குமார், தம்மச்சுடர்,, மாதையன், ஆகியோர் கலந்து கொண்டு உடல் மீது கருப்பு உடை வைத்து மாலை அணிவித்து வீர வணக்க முழக்கமிட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த சின்னம்மாள் படத்தை சி. காமராஜ் அய்.ஏ.எஸ். திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் அகிலா காமராஜ், சிவானி, மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.