உத்தராகண்டில் பெருவெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கேரளா சுற்றுப்பயணிகள் 28 பேரை காணவில்லை

2 Min Read

டேராடூன், ஆக.07 உத்தரா கண்டில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து இதுவரை சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28 பேரை காண வில்லை.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாசி மாவட்டம், இமயமலைப் பகுதியில் 5.8.2025 அன்று மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது.

சார்தாம் யாத்திரை தலங் களில் ஒன்றான கங்கோத்ரி அருகில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டதில் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரளி என்ற கிராமம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த கிராமத்தில் பல விடுதிகள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தன. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வந்தனர். இந்நிலையில் பெருவெள்ளத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏராளமானோரை காணவில்லை. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இதுகுறித்து காவல்துறை காவல்துறைத் தலைவர் மொசென் ஷாஹேதி நேற்று (6.8.2025) கூறியதாவது: தரளி பகுதியில் ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுவரை சுமார் 150 பேரை மீட்டுள்ளனர்.

3 குழுக்கள்

ரிஷிகேஷ் – உத்தரகாசி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தரளி கிராமத்துக்கு கூடுதல் மீட்புக் குழுக்கள் செல்வதில் தாமதம் ஏற் பட்டுள்ளது. தரளி கிராமத்துக்கு அருகில் உள்ள ஹர்சில் பகுதியில் 11 ராணுவ வீரர்களை காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மிக அருகில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் உள்ளன. பாதை சீரானவுடன் அவர்கள் அவர்கள் அங்கு செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தராகண்டில் கின்னார் – கைலாஷ் யாத்திரை பாதையில் 413 பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உத்தராகண்ட் பெருவெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவுக்கு பிறகு கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28 பேரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். இந்த 28 பேரில் 20 பேர் மகாராட்டிராவில் குடியேறியவர்கள். மற்றவர்கள் கேரளாவின் பல்வேறு மாவட்டங் களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

போக்குவரத்து துண்டிப்பு

இமாச்சலில் சிம்லா, மண்டி, குல்லு, தரம்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 4 தேசிய நெடுஞ் சாலைகள் உட்பட 617 சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மண்டி மாவட்டத்தில் 377 சாலைகள், குல்லு மாவட்டத்தில் 90 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனமழை நிலச்சரிவு காரணமாக கின்னார் – கைலாஷ் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *