திருவொற்றியூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
புதுவண்ணை, ஜூன் 10– புதுவண்ணை யில் அமைந்துள்ள தந்தைபெரியார் மாளிகையில் நடைபெற்ற கூட்டத் திற்கு. திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித் தார். துணைத்தலைவர் ந.இராசேந் திரன் முன்னிலை வகிக்க தே.சே. கோபால் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு பொதுக் குழு தீர்மானங்களை செயலாக்கம், கழக அமைப்புப் பணிகளை பற்றி கருத் துரை வழங்கினார்.
பின்வரும் தீர்மானங்களை மாவட்டச்செயலாளர் தே.ஒளி வண்ணன் எடுத்துரைத்தார்.
1. நூற்றாண்டு காணும் அய்ம் பெரும் விழா மற்றும் வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 17.6.2023 அன்று நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. அனைத்துப் பகுதிகளில் பகுதி கழகங்களை நிறுவ தொடர் தெருமுனைப்பிரச்சாரக் கூட் டத்தை நடத்தி புதிய உறுப்பினர் களை இயக்கத்தில் சேர்த்தல்.
3. கொடிக்கம்பங்கள் ஏற்பாடு செய்தல் (இராயபுரம், திருவொற்றி யூர், காசிமேடு, மணலி, மாத்தூர், எலந்தமாநகர், மாதவரம், எண் ணூர், கத்திவாக்கம்)
4. விடுதலை சந்தா சேர்த்தல்
5. காலம் சென்ற பெரியார் பெருந்தொண்டர் மேனாள் மாவட்டத் தலைவர் க.பலராமன் அவர்களின் 100வது ஆண்டு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டக்கழக காப்பாளர்கள் பெரு.இளங்கோ, கி.இராமலிங்கம், பகுத்தறிவு கழக செயலாளர் ஆ.வெங்கடேசன், இரா.சரவணன், சு.செல்வம், ஆ.துரைராவணன், ஆகியோர் இயக்க வளர்ச்சி மற் றும் செயலாக்கம் பற்றிய கருத்து களை வழங்கினர்கள்.