ஜெயங்கொண்டம், ஆக.6– ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அரியலூர் மாவட்டம் இணைந்து வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை 25.07.2025 அன்று நடத்தியது.
முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆ.பால சுப்பிரமணியன், முனைவர் பாலகிருஷ்ணன் ராமநாதன், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.கீதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகள் என 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஆ.பாலசுப்பிரமணியன், முனைவர் பாலகிருஷ்ணன் ,ராமநாதன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி இரா.கீதா ஆகியோர் பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டியில் முதல் அய்ந்து இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தவிர போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.