புதுடில்லி, ஆக.5 டில்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழ்நாட் டைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சுதாவிடம் இருந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தங்க நகையை பறித் துச் சென்றார்.
நகை பறிப்பு
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் சுதா ராமகிருஷ்ணன், டில்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் அவரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் சல்மாவும் நேற்று (4.8.2025) காலை 6.15 மணி அள வில் நடைபயிற்சி மேற் கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் நபர் ஒருவர் சுதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சுதா புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: டில்லி சாணக்யபுரியில் போலந்து தூதரகம் அருகே காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் எனது கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். நகையை இழுத்தபோது என்கழுத்தில் காயம் ஏற்பட்டது. சுடிதாரும் கிழிந்தது. உதவி கோரி கூச்சலிட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை.
காவல் நிலையத்தில் புகார்
பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள சாணக்யபுரி போன்ற முக்கியமான பகுதியில் மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் தலைநகரில், உயர் பாதுகாப்பு மண் டலத்திலேயே ஒரு பெண் பாதுகாப்பாக நடக்க முடியாத சூழல் நிலவி னால், வேறு எங்கு நாம் பாது காப்பாக உணர முடியும்.
குற்றவாளியை கைது செய்ய விரைந்து நடவ டிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும். எனது 4 பவுன் நகையை மீட்டுத் தரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார். நகை பறிப்பு குறித்து அப்பகுதி காவல் நிலையத்திலும் மக்களவை உறுப்பினர் சுதா புகார் கொடுத்துள்ளார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.