புதுடில்லி, ஆக.5 பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்அய்ஆர்) குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முழக்கம் எழுப்பியதையடுத்து நேற்று (4.8.2025) நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல்
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுவரை பல லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களவை செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கி வருகின்றன .
போராட்டம்
நேற்று (4.8.2025) மக்களவை கூடியபோது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. அப்போது மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா கூறுகையில், ‘‘கடந்த காலத்தில் நான் செய்தது போல் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களது பிரச்சினைகளை எழுப்ப போதுமான நேரம் தருவேன், ஆனால் தயவுசெய்து மக்களவையை நடத்த அனுமதிக்கவும்’’ என்று ஓம் பிர்லா கோரிக்கை விடுத்தார். ஆனால், மக்களவைத் தலைவரின் வேண்டுகோளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால் பிற்பகல் 2 மணி வரை மக்களவையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, காங்கிரஸ் உறுப்பி னர்கள் உட்பட எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் மீண்டும் எழுந்து நின்று கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்திய ரூபாய் மதிப்பு
வரலாறு காணாத சரிவு
வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.67 ஆக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமனிய மக்களை கடுமையாக பாதிக்கும்.
குறட்டை விட்டுத் தூங்குபவரா?
மருத்துவர்கள் எச்சரிக்கை!
உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறலுடன், குறட்டையை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கக் குறைபாடு. இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால்(OSA) பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உறக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசம் தடைபடக் கூடிய நிலை ஏற்படலாம். இவர்கள் போதுமான நேரம் தூங்கி எழுந்தாலும், காலையில் உடல்சோர்வை உணர்வார்கள். இந்த பிரச்சினை உள்ள ஆண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என அண்மைக் கால ஆய்வு எச்சரிக்கிறது.
l பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆக.11இல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
l ஆண்டுக்கு ரூபாய் 95 கோடி ஊதியம் வாங்குபவர் யார் தெரியுமா ெஹச். சி.எல்.டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.
l எழும்பூர் பெரியார் ஈ.வெ.ரா. சாலை முதல் உயர்நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டடங்கள் வழித்தடம் ஆகிறது –- சென்னை மாநகராட்சி நடவடிக்கை