டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கல்வி, ஸநாதன சங்கிலியை வீழ்த்தும் கருவி, கமல்ஹாசன் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு: ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது….
* பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் டில்லியில் மூன்று நாட்கள் முகாம். ஆகஸ்ட் ஆறாம் தேதி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 10 பொதுத்துறை வங்கிகள்: முப்பது ஆயிரத்துக்கும் அதிகமாக நிரப்பப்படாமல் காலியாக பணியிடங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்களில் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி
தி இந்து:
* ராகுல் காந்தி ஆகஸ்ட் 17 முதல் பீகாரில் உள்ள 30 மாவட்டங்களில் தன் பயணத்தைத் தொடங்குகிறார். வாக்காளர் உரிமைகளுக்கான ‘மத்ததா அதிகார பயணம்’ சசாரத்தில் தொடங்கி தேர்தல் நடைபெற உள்ள மாநிலத்தில் மூன்று கட்டங்களாக 30 மாவட்டங்களை உள்ளடக்கும்;
தி டெலிகிராப்:
* ‘வங்காளி என்ற மொழியே இல்லை’ பாஜக அய்டி செல் தலைவர் அமித் மாளவியா பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம். வங்கத்தை தொட்டால், அது உங்கள் அரசியலை எரித்து விடும் என எச்சரிக்கை.
– குடந்தை கருணா