உலகத்தில் வாழ்கிற சமுதாயத்தில் ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயம் இருக்கிறதென்றால் அது யார்? நாம்தான். இன்று நேற்றல்ல – என்றைய தினம் சூத்திரன் – சூத்திரச்சி, நான்காவது ஜாதி என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டோமோ அன்று முதல் அதாவது, இந்து மதம் என்று ஒன்று இருப்பதாக நம்பிக் கொண்டு அதன் பேரால் வரும் பாத்திரங்களை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு வணங்கி, என்று அதற்குப் பூசைகள் போட ஆரம்பித்தோமோ அது முதல் இன்று வரையில் காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோமா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’