ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் பலியான பரிதாபம்
லக்னோ, ஆக.4- உத்தரபிர தேசத்தில் கோவிலுக்கு செல்லும் வழியில் கால்வாய்க்குள் கார் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 11 பக்தர்கள் பலியானார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் சிஹா கோன் கிராமத்தை சேர்ந்தவர் பிரகலாத். அந்த கிராமத்தில் உள்ள பள்ளியின் மேலாளராக இருக்கிறார்.
இவருடைய குடும்பத்தினரும், பக்கத்து வீட்டினரும் ஒரு சொகுசு காரில் கார்குபூரில் உள்ள பிரித்விநாத் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
கோவிலில் ‘புனித’ நீரை ஊற்றிவழிபடுவதற்காக அவர்கள் சென்றனர். டிரைவர் உள்பட 15 பேர், அதில் பயணம் செய்தனர்.
கோண்டா மாவட்டம் பேல்வா பகுதா அருகே சென்ற போது, அந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி, சரயு கால்வாய்க்குள் பாய்ந்தது. காருடன் 15 பேரும் கால் வாய்க்குள் விழுந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து வந்து பார்த்துவிட்டு, மீட்புப்படையினருக்கு தகவல் அளித்தனர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் படையினர் போராடி 4 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதி 11 பேரும் விபத்தில் இறந்து விட்டனர். அவர்களில் 6பேர்பெண்கள், 2பேர் ஆண்கள், 3 பேர் குழந்தைகள் ஆவர். பலியானோரில் 9 பேர் பிரகலாத் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. 11 பேரின் உடல் கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பிரகலாத்தின் மனைவி பினா (வயது 44), மகள்கள் காஜல் (22), ரிங்கி (14), பிரகலாத்தின் சகோதரர் ராம்கரன் (36), அவருடைய மனைவி அனசுயா (34), மகள் சவும்யா (9), மகன் சுப் (7), பிரகலாத்தின் தம்பி ராம் ரூப்பின் மனைவி துர்கேஷ் நந்தினி (35), மகன் அமித் (14), பிரகலாத்தின் பக்கத்து வீட்டு பெண்கள் சஞ்சு (26), அஞ்சு (20) ஆகியோர் பலியானவர்கள் ஆவர்.
“பிரகலாத்தின் மகன் சத்யம், இன்னொரு மகள் பிங்கி, பக்கத்து வீட்டுக்காரர் ராம்லாலன் வர்மா, ஓட்டுநர் சீதாராமன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
நிதியுதவி
விபத்தை நேரில் பார்த்த ராகுல் வர்மா என்பவர் கூறுகையில், “மழை பெய்திருந்த தால், சாலை வழுக்கும் தன்மை யுடன் இருந்தது. அந்த இடத்தில் டிரைவர் ‘பிரேக்’ போட்டபோது, கார் வழுக்கி, கால்வாயில் விழுந்தது. உடனடியாக, காவல் துறையினரையும் கிராம மக்களையும் அழைத்தோம். கயிற்றின் உதவியால் காரை வெளியே இழுத்தோம்” என்றார்.
விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதுபோல், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.