மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்பு வாசகங்கள் பேசவில்லை: டில்லி காவல்துறை விளக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

புதுடில்லி, ஜூன் 11– இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனை கள் போராட்டத்தின் போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண் டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபட வில்லை என்று டில்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித் துள்ளது. 

முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு எதிராக வெறுப்பு பேச்சு புகார் மற்றும் பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக வழக் குப் பதிவு செய்யக்கோரி டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டிருந்தது.

அம்மனுவிற்கு பதில் அளிக்கும் விதமாக அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக் கையை (action taken report) நீதிமன்றத்தில் டில்லி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், ”டில்லி ஜந்தர் மந் தரில் நடந்த போராட்டத் தின்போது மல்யுத்த வீராங்கனை கள் பிரதமர் மோடிக்கு எதிராக எழுப்பிய முழக்கம், வெறுக்கத்தக்க பேச்சு வகையின் கீழ் வரக்கூடியது. இது அவர்கள் பிரதமரை கொலை செய்யப் போவதாக மிரட்டியதைத் தெளிவாக உணர்த்தியது” என்று புகார்தாரர் தெரிவித்திருந்தார். 

புகார்தாரர் தனது புகாரில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆதாரமாக அவர் கொடுத்திருந்த காணொலிப் பதிவுக் காட்சிகளில் எந்த விதமான வெறுக்கத்தக்க முழக்கங்களும் இல்லை. போராட் டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் மற்ற பிற மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் அது போன்ற எந்த விதமான முழக்கங் களையும் எழுப்பவில்லை” என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த மனுவினை தள்ளுபடிசெய்யவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக வீராங்கனைகளுக்கு எதிராக ஹிந்துஜாருகுதி சேனா அடல் ஜன் என்ற அமைப்பின் தலை வரான சாமியார் நவுஹா தியா என்பவர் மல்யுத்த வீராங் கனைகளுக்கு எதிராக டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வினை ஜூலை 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டிய லிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *