மேனாள் சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் மீது அமெரிக்காவில் விசாரணை டிரம்ப் வழக்குகளின் தாக்கம் ஆராய்வு!

1 Min Read

நியுஜெர்சி, ஆக. 4– அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குத் தொடர்ந்த மேனாள் அரசாங்கச் சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் (Jack Smith) மீது அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஸ்மித்தின் செயல்பாடுகள் 2024 அதிபர் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை ஆராய இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடியரசுக் கட்சியின் செனட்டர் டாம் கோட்டன் (Tom Cotton) விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஜாக் ஸ்மித் 2022-ஆம் ஆண்டு அரசாங்கச் சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.

டிரம்ப் மீது வழக்கு

அவர் டிரம்ப் மீது இரண்டு முக்கிய வழக்குகளைத் தொடர்ந்தார்: 2020 அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ஒரு வழக்கு மற்றும் ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதாக மற்றொரு வழக்கு. எனினும், டிரம்ப் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்தார்.

இந்த இரு வழக்குகளும் விசாரணைக்குச் செல்லவில்லை. 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற பின்னர், சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் இந்த இரு வழக்குகளையும் கைவிட்டார். டிரம்ப் தன்னை பணியிலிருந்து நீக்குவதற்கு முன்பே ஸ்மித் தனது பதவி விலகினார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் மீது நடத்தப்படும் விசாரணை, அமெரிக்க அரசியல் மற்றும் நீதித்துறையில் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *