நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உறுதியாக இருந்தால், அம்பேத்கரின் தத்துவமும் இந்திய அரசியலமைப்பும் இதற்கு உதவும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
மகாராட்டிராவில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், அம்பேத்கர் முன்வைத்த சமூக-பொருளாதார சமத்துவமும் நீதியும் வரப்போகும் தலைமுறைகளுக்கும் வழிகாட்டும் என்றார். தனது வளர்ச்சிக்கும் அம்பேத்கரின் கருத்துகளே உந்துசக்தியாக இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.